24 Hours Full Entertainment

பாடகி சுசித்ராவை காணவில்லையாம் : பரபரப்பு புகார் கொடுத்த பெண்

தமிழ் சினிமாவின் பல முக்கிய படங்களில் பாடி பிரபலமானவர் பின்னணி பாடகி சுசித்ரா. இவரை பரப்பேருக்கு தெரியும் . இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரை காணவில்லையாம் .

இவர் ஒரு சில மாதங்களுக்கு முன் இணையதளத்தில் சில சர்ச்சையான விசயங்கள் லீக்கானதாக சுச்சி லீக்ஸ் என மிகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சென்னை அடையாறு காந்தி நகரில் தங்கியிருந்த அவரை காணவில்லை என அவரின் அக்கா சுஜிதா போலிஸ் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர் நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை சென்னை அண்ணா நகர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் தன் மீதான கோபத்தால் சுஜிதா புகார் கொடுத்திருப்பதாக சுசித்ரா கூறியுள்ளார்.

இவர்களுக்கிடையில் மனஸ்தாபங்கள் ஏற்கனவே இருந்துள்ளது இதனை காரணமாக கொண்டு இந்தப்புகார் கொடுக்கப்பட்டுள்ளது .
.

சமீபத்திய பதிவுகள்