24 Hours Full Entertainment

ஹ்ரித்திக் ரோஷன் தன் XXXXXXX (அணுவை ) தானம் செய்ய பரிசீலனை செய்ய வேண்டும் என்ற சர்ச்சையான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்- பாவனா

தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் பல நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பன்முகத் தன்மையுடையவராக தொலைக்காட்சிகளில் வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராகவும் இருந்து வருகிறார்.

இதனிடையே இவர் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘வார்’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த படம் குறித்து பாவனாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் ஒன்றை பதிவிட்டிருந்தார் அதில், விறு விறு ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஸ்டண்ட் காட்சிகள் உள்ளதால் ஆண்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றும், அதே நேரத்தில் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் இடம்பெற்றுள்ளதே பெண்களுக்கு இந்த படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணமாக இருக்கும் என்று தனது கருத்தை பதிவிட்டிருந்தார்.

மேலும் ஹ்ரித்திக் ரோஷன் அதிக திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பாவனா, அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர் தன் விந்தணுவை தானம் செய்ய பரிசீலனை செய்ய வேண்டும் என்ற சர்ச்சையான கருத்தையும் சேர்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாவனாவின் இந்த சர்ச்சைக்குறிய பதிவு இணையவாசிகளிடம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது மேலும் இது குறித்து ட்விட்டரில் பலர் பாவனாவுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.

சமீபத்திய பதிவுகள்